நாமக்கல் மாவட்டம் தலமலை சஞ்சிவிராய பெருமாள் கோயில், சுற்றுச்சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பதால் அதனை சுற்றிவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அடுத்த செவிந்திபட்டி தலமலையில் உள்ள சஞ்சிவிராய பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த முசிரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் கோயிலை சுற்றி வரும் போது கால் தவறி 3500 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
இந்த கோயிலின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதி சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்கின்ற போதிலும், பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கான உயிரை பொருட்படுத்தாமல் அதை சுற்றி வருகின்றனர். இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கோயிலைச் சுற்றிவர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.