\
சோமனூர் பேருந்து நிலைய விபத்து: ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் விசாரணை

சோமனூர் பேருந்து நிலைய விபத்து: ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் விசாரணை

சோமனூர் பேருந்து நிலைய விபத்து: ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் விசாரணை
Published on

கோவை அருகே சோமனூர் பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி விசாரணை மேற்கொண்டார்.

கடந்த 7 ஆம் தேதி சோமனூர் பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். அதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்தது. அதனையடுத்து ககன்தீப் சிங் பேடியும், அவருக்கு உதவியாக அரசு பொறியாளர்களும் சோமனூர் பேருந்து நிலையத்தில் இன்று விசாரணை நடத்தினார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அங்கிருந்தவர்கள் அளித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலைய கட்டுமானம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆய்வு நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com