தமிழ்நாடு
சூரிய கிரகணம் சென்னையில் 34 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தெரியும்
சூரிய கிரகணம் சென்னையில் 34 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தெரியும்
வருகிற 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் சென்னையில் 34 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி 16 நிமிடங்களுக்கு கிரகணம் தொடங்கி பிற்பகல் 3 மணி 4 நிமிடங்கள் வரை நிகழவுள்ளது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா, உத்ரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 94 சதவிகிதமும், சென்னையில் 34 சதவிகிதமும் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.