\
கொடைக்கானல் - பழனி சாலையில் மண் சரிவு: சீரமைப்பு பணிகள் தீவிரம்

கொடைக்கானல் - பழனி சாலையில் மண் சரிவு: சீரமைப்பு பணிகள் தீவிரம்

கொடைக்கானல் - பழனி சாலையில் மண் சரிவு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
Published on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - பழனி சாலையில் மண் சரிவு ஏற்பட்டதை அடுத்து ஓடைகள், ஊற்றுகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகி‌ன்றன.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இம்மாத தொடக்கத்தில் தொடர் மழை பெய்தது. ஒரு வாரத்திற்கு மேலாக இந்த மழை நீடித்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன் பெய்த இந்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மண் சரிவால் ஊற்றுகள் மற்றும் ஓடைகளின் நீர்வழித்தடம் மாறியுள்ளதாக சந்தேகம் எழுந்தது. அதையடுத்து, சவரிக்காடு கிராமத்திலிருந்து பழனி பிரிவு வரை சாலையோரத்திலுள்ள புதர்களை அகற்றி ஊற்றுகளை முறைப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com