கூலி வேண்டாம்... நெகிழ வைக்கும் தற்காலிக ஓட்டுநரின் சேவை

கூலி வேண்டாம்... நெகிழ வைக்கும் தற்காலிக ஓட்டுநரின் சேவை
கூலி வேண்டாம்... நெகிழ வைக்கும் தற்காலிக ஓட்டுநரின் சேவை

மதுரையில் மக்களுக்காக கூலி இல்லாமல் அரசு பேருந்தை தனியார் நிறுவன ஊழியர் முத்துப்பாண்டியன் இயக்கி வருகிறார்.

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வரும் இவர்,‌ போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மக்கள் பாதிக்கபடுவதை கண்டுள்ளார். போக்குவரத்து கழக மதுரை மண்டல தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவர் மக்களுக்காக பேருந்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பேருந்துகளை ஓட்டுவதற்கான உரிமம் வைத்துள்ள முத்துபாண்டிக்கு கூலி வழங்க போக்குவரத்து கழகம் முன்வந்தபோது மக்களுக்கு சேவையாற்ற கூலி வேண்டாம் என மறுத்து விட்டார்.

இதுகுறித்து முத்துபாண்டி கூறுகையில், அரசுப்போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் போதிய பேருந்துகள் இயங்காததால் பெரிதும் பாதிக்கப்படும் மாணவர்கள், பொதுமக்களுக்காக சேவை ஆற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். முத்துபாண்டி மக்களின் தேவை அறிந்து உதவிகள் புரிவது அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com