ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைந்தவர்கள் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராட்டம்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைந்தவர்கள் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராட்டம்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைந்தவர்கள் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராட்டம்
Published on

திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன் 'மண்ணின் மைந்தர்கள்' என்ற அமைப்பின் சார்பில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக ஒன்று சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலம் கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக ஒருநாள் அடையாள உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தை விட்டு ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும், காவல்துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை விடுவிக்கவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் இன்று 58ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு எதிராகப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூரில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன் 'மண்ணின் மைந்தர்கள்' என்ற அமைப்பின் சார்பில் பேஸ் புக், வாட்ஸ்அப் மூலமாக ஒன்று சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும். கைது செய்தவர்களை எந்த ஒரு நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‌ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com