\
7 லட்சம் பேர் பயணம்
7 லட்சம் பேர் பயணம்முகநூல்

பண்டிகை விடுமுறை: சென்னையில் இருந்து பேருந்துகள்,ரயில்கள் மூலம் 7 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

ஆயுதபூஜை தொடர்விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் இதுவரை 7 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
Published on

சனி, ஞாயிறு விடுமுறையோடு, ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் 651 சிறப்பு பேருந்துகள் நேற்று முன்தினம் இயக்கப்பட்டன. 

இவைகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். இதேபோல், சென்னையில் இருந்து ஆயிரத்து 280 ஆம்னி பேருந்துகள் வாயிலாக 51 ஆயிரத்து 200 பேர் சொந்த
ஊர்களுக்குச் சென்றனர்.

நேற்று வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 950 பேருந்துகள்
இயக்கப்பட்டன. கடந்த 18-ம் தேதி முதல் நேற்று வரை 8 ஆயிரத்து 635 பேருந்துகளில் விதிமீறல் குறித்து சோதனை நடத்தப்பட்டது. 

7 லட்சம் பேர் பயணம்
ஈரோடு: பண மோசடி புகார் - பிரணவ் ஜூவல்லரி கடையின் பூட்டை உடைத்து குற்றப்பிரிவு போலீசார் சோதனை

அவற்றில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட ஆயிரத்து 545 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com