வெறும் 3 நாட்களிலேயே இத்தனை லட்சம் உறுப்பினர்களா?! த.வெ.க நிர்வாகி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர். உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநில துணை செயலாளர் கல்லணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Vijay
Vijaypt desk

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் கடந்த மாதம் அதிரடியாக அரசியலில் குதித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்த அவர், சினிமாவில் இருந்து விலகி முழுநேர் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். மேலும், 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைப்பதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தவெக நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக செல்போன் செயலி நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. மேலும், 94440 05555 என்ற வாட்சப் எண்ணிற்கு TVK என குறுஞ்செய்தி அனுப்பியும் கட்சியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியும் வெளியிடப்பட்டது.

பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கையை கடந்த 8 ஆம் தேதி மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதையடுத்து உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

actor vijay
actor vijaypt desk

முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அனைவரும் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துகொள்ள விஜய் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் என தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக மாநில துணை செயலாளர் கல்லணை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com