தமிழ்நாடு
அலறவிட்ட நல்ல பாம்பு - சாதுரியமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்
அலறவிட்ட நல்ல பாம்பு - சாதுரியமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்
ஆவடி அருகே வீட்டில் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் சாதுரியமாக பிடித்தனர்.
சென்னை ஆவடி அடுத்த கோவில் பதாகை ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்துள்ளது. பாம்பை பார்த்த வீட்டில் உள்ளவர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் ரவி, ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி 5 அடி நீளமுள்ள பாம்பை சாதுரியமாக பிடித்தனர். பின்னர் அந்தப் பாம்பினை ஒரு சாக்கு பையில் போட்டு அடைத்து கொண்டு சென்றனர். பிடிபட்ட பாம்பை தீயணைப்புத் துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.