\
சமையலறைக்குள் பதுங்கி இருந்த விஷப்பாம்பு - ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

சமையலறைக்குள் பதுங்கி இருந்த விஷப்பாம்பு - ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

சமையலறைக்குள் பதுங்கி இருந்த விஷப்பாம்பு - ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
Published on

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராம பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது வீட்டுக்கு இன்று ஐந்தரை அடி நீள பாம்பு ஒன்று புகுந்துள்ளது இதனை பார்த்த கணேசன், உடனடியாக திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறை பொறுப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர், வீட்டில் பல்வேறு பகுதிகளில் தேடி இறுதியாக வீட்டில் சமையல் அறை பகுதியில் பதுங்கியிருந்த விஷப் பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். இதையடுத்து, அந்தப் பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று அவர்கள் விட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com