குடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..?: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்

குடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..?: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்
குடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..?: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்

குடியாத்தம் அடுத்த மலைப் பகுதியில் அனகோண்டா பாம்பு உள்ளதாக சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோவால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை  தமிழகம்-ஆந்திரா மாநில எல்லை பகுதிகளில் அமைந்து உள்ளது. ஆந்திராவில் அதிகளவில் மழை பெய்து வருவதால் மலைகள் வழியாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு பின் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் ராட்சத மலைப் பாம்பு ஒன்று விலங்குனை விழுங்கி கொண்டு அசைய முடியாமலும், வேகமாக செல்ல முடியாமலும் அங்கேயே ஊர்ந்து சென்றதை இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சி குடியாத்தம் பகுதிகளிலுள்ள வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள், “சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பாம்பு அனகோண்டா வகையை சேர்ந்தது இல்லை. அது பெரிய அளவிலான மலைப்பாம்பு. மலைக்கிராமங்களில் உள்ளவர்கள் ஆடு, மாடு கோழிகள் உள்ளிட்டவற்றை கண்காணித்துக் கொள்ள வேண்டும். விறகுகளை வெட்டவோ ஆடு மாடுகளை மேய்க்கவோ மாலை நேரங்களில் தனியாக யாரும் காட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்க விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com