திருப்பத்தூர்: சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்தை சுற்றி நின்ற நாகப்பாம்பு
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கீழ் முருங்கை பகுதியில் சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி நேற்று முன்தினம் வழக்கம் போல பக்தர்கள் தரிசனம் செய்ய சென்றபோது, கருவறையில் உள்ள சிவ லிங்கத்தின் மீது நாகப்பாம்பு ஒன்று நின்றுள்ளது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன கோயில் அர்ச்சகர், அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதி மக்கள் கோவில் முன் திரண்டனர்.
ஒரு மணி நேரமாக சிவலிங்கத்தை விட்டு நகராமல் இருந்த நாகப்பாம்பு, பின்னர் கருவறையில் இருந்து வெளியேறி வயல்வெளியை நோக்கி சென்றது.
இதே போல கடந்த 2023 ஆம் ஆண்டு கோயில் கருவறைக்கு முன் உள்ள நந்தி மீது நாகப்பாம்பு படம் எடுத்து காட்சி கொடுத்தது. தற்போது சிவலிங்கத்தின் மீது நாகபாம்பு நின்றுள்ளது.