டிராபிக்கில் நின்ற இளைஞர் : மரத்திலிருந்து பைக் மீது விழுந்த பாம்பு

டிராபிக்கில் நின்ற இளைஞர் : மரத்திலிருந்து பைக் மீது விழுந்த பாம்பு
டிராபிக்கில் நின்ற இளைஞர் : மரத்திலிருந்து பைக் மீது விழுந்த பாம்பு

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக டிராபிக்கில் நின்றிருந்த இளைஞரின் புல்லட் பைக்கிற்குள் பாம்பு புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அருகேயுள்ள கரியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் இன்று காலை தனது புல்லட் பைக்கில் புதுச்சேரி நகருக்கு சென்றுள்ளார். புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் விக்னேஷ் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் இருந்த மரத்திலிருந்து சாரைப் பாம்பு ஒன்று கீழே விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார். அவர் பாம்பு என அலறிக்கொண்டு ஓடுவதைக் கண்ட மக்கள் உடனே அங்கு கூட்டமாக கூடியுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் புகுந்திருந்த பாம்பை எடுக்க முயன்றனர். பின்னர் பைக் மெக்கானிக் உதவியுடன் பாம்பை வெளியே எடுத்தனர். பாம்பு எடுக்கப்பட்ட பின்னர் விக்னேஷ் புல்லட் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றார். வனத்துறையினர் பாம்பை வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com