வீட்டிற்குள் குட்டிகளுடன் குடியேறிய தாய் பாம்பு - மிரட்டலும்.. மீட்பும்..

வீட்டிற்குள் குட்டிகளுடன் குடியேறிய தாய் பாம்பு - மிரட்டலும்.. மீட்பும்..

வீட்டிற்குள் குட்டிகளுடன் குடியேறிய தாய் பாம்பு - மிரட்டலும்.. மீட்பும்..
Published on

புதுக்கோட்டையில் குடியிருக்கும் வீட்டிற்குள் குட்டிகளுடன் புகுந்த தாய் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பொற்குடையார்கோவில் சாலையில் ராஜேந்திரன் என்ற சலவை தொழிலாளி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் 3 கிளிகள் வளர்த்து வரும் நிலையில், இன்று மூன்று கிளிகளும் வழங்கத்துக்கு மாறாக கத்தியுள்ளது. உடனே ராஜேந்திரன் கிளியின் அருகில் சென்று பார்த்த போது, இரண்டு பாம்பு குட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் வீட்டின் உட்புறம் இருந்த பொருட்களை வெளியில் எடுத்துவிட்டு, இரண்டு பாம்பு குட்டிகளையும் உயிருடன் பிடித்தனர். பிடிக்கப்பட்ட இரண்டு பாம்புகளும் சுரக்கை விரியன் வகையை சேர்ந்த, விசத்தன்மை கொண்ட குட்டிப் பாம்புகள் என்பது தெரியவந்தது. 

பின்னர் மறைந்திருந்த தாய்பாம்பை தேடினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு தாய் பாம்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ராஜேந்திரன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, வெளியில் சென்றிருந்த தாய் பாம்பும் வீட்டின் ஓடு வழியாக உள்ளே வந்துள்ளதை பார்த்துள்ளார். பார்த்தவுடன் மீண்டும் வந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து தாய் பாம்பையும் பிடித்தனர். பின்னர் தாய் பாம்பு மற்றும் குட்டிகளை அருகிலுள்ள காட்டில் விட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com