\
மோசமான சாலை.. செல்ல முடியாத ஆம்புலன்ஸ்.. பறிபோன உயிர்

மோசமான சாலை.. செல்ல முடியாத ஆம்புலன்ஸ்.. பறிபோன உயிர்

மோசமான சாலை.. செல்ல முடியாத ஆம்புலன்ஸ்.. பறிபோன உயிர்
Published on

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து வரதராஜபெருமாள் கட்டளை வரை, மூன்று கிலோ மீட்டர் சாலை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சீர் அமைப்பதற்காக தோண்டப்பட்டது.

ஆனால் இதுவரை சாலை போடப்படவில்லை. இதனிடையே வரதராஜபெருமாள் கட்டளை பகுதியைச் சேர்ந்த மாலா என்ற பெண்ணிற்கு பாம்பு கடித்தது. எனவே அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலையில் ஆம்புலனஸ் வர முடியாத காரணத்தினால், மூன்று கிலோமீட்டர் தூக்கி சென்று ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் மாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தோண்டப்பட்ட சாலை சரி செய்திருந்தால் ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்திருக்கும். ஓர் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com