விமானத்தில் கரும்புகைpt desk
தமிழ்நாடு
சென்னை: விமானத்தில் திடீரென கிளம்பிய கரும்புகை... விமான சேவை பாதிப்பு – பயணிகள் அவதி
சென்னையில் நேற்று இரவு துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு துபாய்க்கு 280 பயணிகளுடன் புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து உடனடியாக அந்த விமானம் புறப்படுவதை நிறுத்தி, விமானத்தின் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
விமானத்தில் கரும்புகைpt desk
இந்நிலையில் கோளாறு ஏற்பட்டுள்ள விமானத்தை சரிசெய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 12.40 மணிக்கு விமானம் புறப்படும் என தகவல் வெளியான நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
சிறந்த இந்திய படமா? இந்தி படமா?.. ஆஸ்கார் விருதுக்கு ’லாபதா லேடீஸ்’ அனுப்பட்டதற்கு எழுந்த விமர்சனம்!
இதற்கிடையே விமானத்தின் உள்ளே இருந்த 280 பயணிகளும் விமானத்தின் உள்ளேயே இருந்தனர். விமானம் புறப்பட தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.