ரேஷன் கடைகளில், நாளை முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மின்னணு அட்டைகளைப் பெற்றவர்களுக்கு, அதன் மூலமாகவே அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, விரைவில் மின்னணு அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.