ஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு

ஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு

ஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு
Published on

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் 4 மாத குட்டி யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மாயார் அணையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி‌ மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அணையின் தடுப்பில் சிக்கியவாறு இருந்த குட்டி யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். 

தாய் யானையுடன் தண்ணீர் குடிக்க வந்தபோது, குட்டி யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com