\
கோடையில் கொட்டிய ஆலங்கட்டி மழை

கோடையில் கொட்டிய ஆலங்கட்டி மழை

கோடையில் கொட்டிய ஆலங்கட்டி மழை
Published on

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் கோவையில் ஆலங்கட்டி மழை பெய்தது. 

கோவையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் முதல் வானத்தை மேகம் சூழந்து காணப்பட்டது நிலையில், பல இடங்களில் குறிப்பாக கவுண்டன்பாளையம், தடாகம் சாலை  உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் வேகமான காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. கோவைமாநகரப் பகுதிகளில் லேசான சாரல் மழையும் பலத்த இடியும் இருந்து வருகிறது. திடீரென பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து அப்பாகுதி குளிர்ச்சியாக மாறியது. கோடை காலத்தில் பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com