‘உயிர் வேணும்னா? கத்தாத’ - கத்தியைக் காட்டி தூங்கிய பெண்ணிடம் கொள்ளை

‘உயிர் வேணும்னா? கத்தாத’ - கத்தியைக் காட்டி தூங்கிய பெண்ணிடம் கொள்ளை

‘உயிர் வேணும்னா? கத்தாத’ - கத்தியைக் காட்டி தூங்கிய பெண்ணிடம் கொள்ளை
Published on

பெரம்பலூர் அருகே நள்ளிரவில் வீட்டில் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், பெரம்பலூரில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டை உட்புறமாக தாளிட்டு, அவரது தங்கை மற்றும் இரு குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டில் உள்ள பிரபு என்பரவது வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அது முடியாத பட்சத்தில், சத்யாவின் வீட்டுக்குள் கொள்யையடிக்க அவர்கள் நோட்டமிட்டனர். அப்போது சத்யா அவரது தங்கை மற்றும் குழந்தைகளுடன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்ததை பார்த்த திருடர்கள் சத்தமில்லாமல், வீட்டின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த விலை உயர்ந்த வெளிநாட்டு கடிகாரத்தை எடுத்து கொண்டனர்.

பின்னர், உறங்கி கொண்டிருந்த சத்யா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கத்தரித்து எடுத்தனர். அடுத்து 5 பவுன் தாலிக்கொடியை கத்தரிக்கும் போது சத்யா விழித்தார். அப்போது கொள்ளையர்கள் கத்தியை காட்டி, ‘உயிர் வேணும்னா கத்தாத’, கத்தினால் குத்திவிடுவோம் என மிரட்டி உள்ளனர். இதில் பயந்து போன அவர் சத்தம் போடவில்லை. ஓரிரு நிமிடங்களில் கொள்ளையர்கள் தப்பித்து சென்றனர். 

இது குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமாராவில் கொள்ளையடிக்க அடிக்க வந்த மூவரின் உருவப்படம் பதிவாகி உள்ளது. மேலும், தடயங்களை வைத்து கொள்ளையர்களை பெரம்பலூர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறித்து சென்ற சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com