ராமநாதபுரம் : நோயாளியை செருப்பால் தாக்கிய பணியாளர்?
கமுதி அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலுடன் வந்த நோயாளியை செருப்பால் தாக்கியதாக கூறப்படும் மருத்துவமனை பணியாளரை பிடித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணபவா. இவர் காய்ச்சலுடன் கமுதி அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்த இருப்பதால் இன்று காலை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே சரவணபவா தங்கியிருந்தார்.
(பாதிக்கப்பட்டவர்)
இதனிடைய மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் பாரதி என்பவர், மருத்துவமனை வளாகத்தில் தங்கக் கூடாது என அவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாரதி, அந்த பெண்மணியை செருப்பால் அடித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சரவணபவா கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கமுதி போலீசார் மருத்துவமனை பணியாளர் பாரதி மற்றும் சரவணபவா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.