திமுக மீது அவதூறு: கவலை இல்லை என்கிறார் ஸ்டாலின்

திமுக மீது அவதூறு: கவலை இல்லை என்கிறார் ஸ்டாலின்

திமுக மீது அவதூறு: கவலை இல்லை என்கிறார் ஸ்டாலின்
Published on

திமுக மீது அவதூறு செய்வோர் பற்றிக் கவலை இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலனுக்காக போராட திமுகவிற்கு‌ என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பும் அரசியல் கட்சிகளுக்கு எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் அவர்கள் அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் அவதூறு பேசுவதை பற்றி தனக்கு கவலையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து திமுக என்றும் பயணிக்கும். திமுக மீது குற்றம் சாட்டி சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. விவசாய தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, இலவச மின்சாரம், கூட்டுறவு கடன்கள் ரத்து, உழவர் சந்தை உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்ததும் நிறைவேற்றியதும் திமுக ஆட்சியில்தான் என்பதை விவசாயிகள் அறிவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com