\
இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு
Published on: 

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 

பருத்தித் துறை அருகே வெற்றிலைகேணி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இதைத் தடுக்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com