தமிழ்நாடு
வீட்டின் முன்பு இருந்த மண்டை ஓடு - அதிர்ந்து போன கிராம மக்கள்
வீட்டின் முன்பு இருந்த மண்டை ஓடு - அதிர்ந்து போன கிராம மக்கள்
பழனி, தேவாங்கர் தெருவில் உள்ள வீடுகளின் முன்பு மனித தலை மற்றும் கால்களின் எலும்புக்கூடுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் உள்ளது தேவாங்கர் தெரு. இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், அங்குள்ள சிலரது வீடுகளின் முன்பு மர்ம நபர்கள் சிலர் மனித எலும்பு கூடுகளை வைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து காலையில் வழக்கம் போல் கதவைத்திறந்து பார்த்த சம்பந்த வீட்டினர் வீட்டின் முன்பு மனித தலை மற்றும் கால்களின் எலும்பு கூடுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.