சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
Published on

இரண்டாவது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர்  பாபாவை வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியர் புகார் அளித்தனர். இதனை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் கைது செய்யப்பட்ட அவர், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், இவர் மீது 3 போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு போக்சோ வழக்கில் மட்டும் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது இரண்டாவது போக்சோ வழக்கில் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். எனவே புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com