சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர் 

சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர் 

சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர் 
Published on

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அப்துல்கலாம் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினம் அன்று சிவனால் வரமுடியாத சூழ்நிலையில் தற்போது தலைமை செயலகத்தில் நேரடியாக வந்து முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார். 

சிவனை பொறுத்தவரை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2007 ஆம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012 ஆம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் புதிய தலைமுறை சார்பில் வழங்கப்பட்டு வரும் தமிழன் விருதையும் 2017 ஆண்டு சிவன் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் சாதனையாளர் என்ற வரிசையில் இந்த விருது சிவனுக்கு வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com