தமிழ்நாடு
ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு: காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள்
ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு: காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள்
பட்டாசு தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரி விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
பட்டாசு தொழிலுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி தங்களை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அதை 12 சதவீதமாக குறைக்கக் கோரியும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று முதல் போராட்டம் தொடங்கியது. இதையடுத்து சுமார் 800-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள், 600 விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள் என்றும் பட்டாசு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.