சிவகாசி: ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு காரணம் என்ன?

சிவகாசி: ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு காரணம் என்ன?
சிவகாசி: ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு காரணம் என்ன?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளான பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி பட்டாசு தயாரிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் (டாப்மா) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு தயாரிப்பிற்கு 80 சதவீத பங்கு வைக்கக்கூடிய பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப் பொருளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மாற்று ரசாயனம் மூலப்பொருளை தீய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை இதுவரை அறிவிக்கப்பட்டதால் பட்டாசு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தொழில் கடுமையாக பாதித்துள்ளது

இந்நிலையில் பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி பட்டாசு தயாரிப்பு மீதான தடையை நீக்குவதுடன் இதுபோன்ற தடை ஏற்படாத வகையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களித்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சங்கத்தின் கீழ் சிவகாசி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, மடத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 300 பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com