சிவகாசி: பட்டாசு வெடித்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கோயில் ராஜகோபுரம்

சிவகாசி: பட்டாசு வெடித்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கோயில் ராஜகோபுரம்
சிவகாசி: பட்டாசு வெடித்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கோயில் ராஜகோபுரம்

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்நிலையில், தற்போது கும்பாபிஷேகத்திற்காக இந்த கோயிலிஸ் புனரமைப்பு பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோயில் வழியாக திருமண சீர்வரிசை கொண்டு சென்றவர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தீப்பொறி கோவிலின் ராஜ கோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து தீ பிடித்துள்ளது. இதையடுத்து தீ மள மளவென எரியத் தொடங்கியது இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பத்துக்கு மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com