சிவகாசி அருகே மருத்துவ முகாம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 20-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ முகாம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் கடந்த ஒரு வாரமாக 10 சிறுவர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் பொதுமக்கள் கூறுகின்றனர். முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரச் சீர்கேடும் நிலவுகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள்
குற்றஞ்சாட்டுகின்றனர். சுகாதார சீர்கேடு குறித்து வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.