100 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கிய சிவகாசியின் நிலை இப்போது வேலையில்லாத ஊராக மாறிவிட்டது.
தீபாவளி என்றாலே பட்டாசு. அதன் வெடி சத்தத்தை கேட்காமல் தீபாவளி திருநாள் நிறைவடையாது. பட்டாசு என்றதுமே எல்லோருக்கும் நினைவில் வருவது சிவகாசி பட்டாசுதான். இது ‘குட்டி ஜப்பான்’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் இங்கு தயாரிக்கும் பட்டாசுகள் தான்.
பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு மட்டுமல்ல, தீப்பெட்டி தயாரிப்புக்கும்பேர் பெற்றது இந்த ஊர். இங்கு வருடம் முழுவதும் மக்கள் தீவிரமாக பட்டாசுகளையும், தீப்பெட்டிகளையும் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமல்ல இந்த ஊரில் பலர் காலண்டர் தயாரிப்பிலும் வேலை செய்து வந்தனர். பட்டாசு தொழிற்சாலை அதன் சம்பந்தப்பட்ட மற்ற தொழில்களிலும், ஆரம்ப காலகட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக
வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். அதன் பிறகு குழந்தை தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுவதை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.
8 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் விரும்பியும் விரும்பாமலும் தங்கள் குடும்ப சூழ்நிலை கருதியும் இந்த பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். போன அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்த முக்கிய நீதிமன்ற முக்கிய
தீர்ப்புகள் சிவகாசியினர் வாழ்வில் பெரும் பேரிடியாக விழுந்ததது. இந்த தீர்ப்புகளால் இந்த ஊரே ஸ்தம்பித்து போய் நிலைகுலைந்து விட்டது.
பட்டாசு தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவருமே வாழ வழி தெரியாமல் தத்தளித்து வருகின்றனர். இதில் டிசம்பர் மாதம் இங்கு காலண்டர் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடக்கும் அதில் சிலர் வேலை செய்து வந்தனர்.அதிலும் சிலர் சொந்த ஊரை விட்டு விட்டு, வாழ்வாதாரத்தை தேடி திருப்பூருக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அனேக மக்களின் எதிர்காலம் இப்போது கேள்விக் குறியாகி உள்ளது.