Murder case
Murder casept desk

சிவகாசி: காதல் திருமணம் செய்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை – நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்!

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி. இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவரை அவர் காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து, அய்யம்பட்டியில் வசித்து வந்தனர்.

Police station
Police stationpt desk

இந்நிலையில், சிவகாசி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகே உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் தனது மனைவி நந்தினியை அழைத்து வருவதற்காக கார்த்திக் பாண்டி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், கார்த்திக் பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் நிலைகுலைந்த இளைஞர், பல்பொருள் அங்காடி வாசலிலேயே உயிரிழந்தார்.

Murder case
ஆம்பூர்: கூலித் தொழிலாளிகளின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்று மோசடி - தலைமறைவான இளைஞர் கைது

பெண்ணின் சகோதரரான பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக் பாண்டியை கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com