சிவகாசி: காளையார் குறிச்சி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.
பட்டாசு விபத்து
பட்டாசு விபத்துபுதிய தலைமுறை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகரை சுற்றி உள்ள கிராமங்களில் பெரும்பாலும் பட்டாசு என்பது குடிசைத்தொழிலாக உள்ளது. இதனை அடுத்து அப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், மற்றும் பட்டாசு குடோன்கள் இயங்கி வருகிறது. கவனக்குறைவு மற்றும், மின்கசிவு போன்ற சில காரணங்களால் இப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இன்று அதே போல் காளையார் குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலையில் திடீரன தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாரியப்பன் மற்றும் முருகன் என்ற இரு தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பட்டாசு விபத்து
திண்டுக்கல் | வசூல் செய்த ரூ 4.66 கோடி வரிப்பணத்தை வாரிச்சுருட்டிய அதிகாரி!

மேலும், இந்த விபத்தில் 2 பெண்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. போலிசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com