நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்

நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்
நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயி நெல் ஜெயராம் மகனின் கல்வி செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி வந்தவர், நெல் ஜெயராமன். இவர் யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர். ஆண்டுக்கொருமுறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி பலருக்கும் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி வந்தார். அந்த நெல்விதைகளை பெற்றுச் செல்லும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் அதை விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக திரும்ப பெற்று அதனை மீண்டும் புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தி சாதனை செய்தார். 

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இன்று காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து திரைப் பிரபலங்கள் உள்பட பலரும் நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவு மற்றும் அவரது மகனின் கல்வி செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். ஏற்கெனவே நெல் ஜெயராமனின் மருத்துவச் செலவையும் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com