தமிழ்நாடு
மேடையில் சிவாஜியின் வசனம் பேசி, பாடல் பாடிய அமைச்சர் ஜெயக்குமார்
மேடையில் சிவாஜியின் வசனம் பேசி, பாடல் பாடிய அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர் சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜியின் வசனம் பேசி, பாடல் பாடினார்.
சென்னை அடையாறில் நடைபெற்ற சிவாஜியின் மணிமண்ட திறப்பு விழாவின் போது உரையாற்றிய ஜெயக்குமார், “சிவாஜியின் பெருமையை ஒருநாள் முழுவதும் கூறலாம். கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம், பாராதி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை நமது கண்ணிற்கு முன் கொண்டுவந்தவர் சிவாஜி. சிவாஜி வசனங்களை பார்த்துதான், விரைவாக தமிழ் வாசிப்பிற்கு கற்றுக்கொண்டேன். அவரைப் போன்று தற்போது உள்ள எந்த நடிகராலும் இனிமேல் நடிக்க இயலாது. வசனங்கள் பேசுவதிலும், வீரமான நடிப்பிலும் சிவாஜி சிறந்தவர்.” என்று கூறினார். அப்போது சிவாஜி நடித்த ‘புதிய பறவை’ திரைப்படத்தின் பாடலான ‘மெல்ல நட மெல்ல நட’ பாடலையும், மற்றொரு படத்தின் வசனத்தையும் பேசினார்.