
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியொன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளி வேனில், வழக்கம்போல் இன்று மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சருகனேந்தல் கண்மாய் அருகே வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சிக்கிய குழந்தைகள், பெரியவர்கள் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களில் முலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி வேலன் என்ற ஏழாம் வகுப்பு மாணவன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரன்றி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுடன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.