சிவகங்கை: ஆபத்தை உணராமல் அரசுப்பள்ளி மாணவர்கள் செய்த செயலால் பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை: ஆபத்தை உணராமல் அரசுப்பள்ளி மாணவர்கள் செய்த செயலால் பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை: ஆபத்தை உணராமல் அரசுப்பள்ளி மாணவர்கள் செய்த செயலால் பொதுமக்கள் அச்சம்
Published on

தேவகோட்டையில் பேருந்தின் மேற்கூரையில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் மாணவர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு படிப்பதற்காக ஓரியூர், மங்களக்குடி, ஊரணி கோட்டை, அனுமந்தகுடி பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் நாள்தோறும் தேவகோட்டைக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், பள்ளி நேரத்திற்கு ஒரேயொரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் இடமின்றி மாணவர்கள், பேருந்தின் மேற்கூரையில் மீது ஏறி பயணம் செய்து வருகின்றனர். மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை கண்டு பொதுமக்களும் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.

நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்கி மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com