\
தேவகோட்டை நகராட்சி திமுக பெண் உறுப்பினர் கடத்தப்பட்டாரா? கணவர் புகார்

தேவகோட்டை நகராட்சி திமுக பெண் உறுப்பினர் கடத்தப்பட்டாரா? கணவர் புகார்

தேவகோட்டை நகராட்சி திமுக பெண் உறுப்பினர் கடத்தப்பட்டாரா? கணவர் புகார்
Published on

தேவகோட்டையில் 24-வது வார்டு உறுப்பினர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 5 இடங்களிலும் அதிமுக 10 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களிலும் அமமுக 5 இடங்களிலும் சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இதனால் நகர்மன்றத் தலைவர் பதவி யாருக்கு என்ற இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், 24-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரான பிச்சையம்மாள் கடத்தப்பட்டதாக தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் அவரது கணவர் விக்னேஸ்வரன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com