படித்தது ஹோமியோபதி, பார்த்தது ஆங்கில மருத்துவம்: 2 போலி மருத்துவர்கள் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிஎம்சி சாலையில் வசிப்பவர் அருள்சாமி. இவர் ஹோமியோபதி மருத்துவம் படித்து விட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதே போன்று, காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சுப்பையா என்பவர் ராணுவ மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தை கொண்டு மருத்துவம் பார்த்துள்ளார். இதுகுறித்த புகார் சிவகங்கை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் விஜயமதமடக்கியிடம் கொடுக்கப்பட்டது. இதனை விசாரணை செய்த இணை இயக்குனர் போலி மருத்துவர்கள் குறித்து, காவல் துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலிசார் போலி மருத்துவர் அருள்சாமி, சுப்பையா மற்றும் அருள்சாமியின் உதவியாளர் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.