Accused
Accusedpt desk

சிவகங்கை | பாஜக நிர்வாகி கொலை வழக்கு – கைதானவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுப்பிடித்த காவல்துறை!

சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி கொலை வழக்கில் கைதானவர் தப்ப முயன்ற போது, காவல்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
Published on

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி செல்வகுமாரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவத்தில் வசந்த குமார், மருதுபாண்டி, அருண்குமார், சட்டீஸ்வரன், விஷால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Murder case
Murder casept desk

இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தில் கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்த இடத்தை காண்பிப்பதற்காக, குற்றவாளிகளை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது சார்பு ஆய்வாளர் பிரதாப்பை தாக்கிவிட்டு வசந்த குமார் தப்ப முயன்றார்.

Accused
நாமக்கல் | சிறுமியை கொல்ல முயன்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது தாய் கைது!

இதைக்கண்ட ஆய்வாளர் மணிகண்டன், வசந்தகுமாரை துப்பாக்கியால் காலில் சுட்டார். இதையடுத்து காயம் அடைந்த வசந்தகுமாரும், சார்பு ஆய்வாளர் பிரதாப்பும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com