தமிழக முறைப்படி அமெரிக்க பெண்ணை திருமணம் செய்த இளைஞர்
3 ஆண்டுகளாக காதலித்து வந்த அமெரிக்க பெண்ணை தமிழக பாரம்பரிய முறைப்படி தமிழக இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தட்டடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லையா - தவமணி தம்பதியினர். இவர்களது மகன் கந்தசாமி, ஆராய்ச்சி படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ சென்று தற்போது அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த எலிசபெத் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்ப்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. மூன்றாண்டுகளாக காதலித்து வந்தவர்கள் 5 நாள்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர்.
இந்நிலையில், இன்று பெற்றோர்களின் சம்மதத்துடன், கந்தசாமி எலிசபெத்தை தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

