\
சிவகங்கை: தேர்தல் பணிக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு

சிவகங்கை: தேர்தல் பணிக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு

சிவகங்கை: தேர்தல் பணிக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு
Published on

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, திருவேகம்பத்தூரை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (40). இவர் வாராப்பூர் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று நடக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்ற திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காரையூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலராக பணி அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணி இடத்தில் நேற்றிலிருந்து பணியாற்றி வந்த நிலையில், இன்று காலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் பணியாற்றிய ஊழியர்கள், ரஜினிகாந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டவரயான்பட்டி போலீசார் ரஜினிகாந்த் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com