\
சிவகங்கை: வெறிநாய் கடித்து சிறுவன் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை: வெறிநாய் கடித்து சிறுவன் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை: வெறிநாய் கடித்து சிறுவன் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
Published on: 

இளையான்குடியில் வெறிநாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இடைய வலசை, ரசூலா சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய்கள் பொதுமக்களை கடித்து துன்புறுத்தி வருகின்றன.

இதுவரை அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ், ஹேமலதா, அலிமா பீவி உள்ளிட்ட 7 பேரை நாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் இளையான்குடி அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெறிநாய்கள் குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இளையான்குடி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் மற்றும் வெறிநாய்கள் தொல்லை உள்ளிட்டவைகளை பேரூராட்சி நிர்வாகம் சீர்செய்ய வேண்டும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் பேரூராட்சி செயல் அலுவலரை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com