ரவுடி வெட்டிக் கொலைpt desk
தமிழ்நாடு
சிவகங்கை | காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த ரவுடி வெட்டிக் கொலை
காரைக்குடியில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: நாசர்
சிவகங்கை மாவட்டம் சேர்வார் ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் மனோ (எ) மனோஜ் குமார். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் .இந்நிலையில், இன்று காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
DeathFile Photo
அப்போது, காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், மனோஜை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இதில், நண்பர்கள் இருவரும் காயம் அடைந்த நிலையில், அவர்களை போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பிச் சென்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.