தமிழ்நாடு
பாழடைந்த கிணற்றில் விழுந்த தங்கை : காப்பாற்ற சென்ற அண்ணன்: 3 பேர் சடலாக மீட்பு
பாழடைந்த கிணற்றில் விழுந்த தங்கை : காப்பாற்ற சென்ற அண்ணன்: 3 பேர் சடலாக மீட்பு
கிணற்றில் விழுந்த தங்கையையும் காப்பற்ற சென்ற அண்ணன் மற்றும் உறவினரை 3 மணிநேரம் தேடும் பணி தீவிரமாக நடபெற்றது. இதில் 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
நீலகிரி தேவாலா பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா(22). இவர் அப்பகுதி வனப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்துள்ளார். இவரை காப்பாற்ற சென்ற அண்ணன் தமிழ் அழகன் மற்றும் உறவினர் முரளிதரன் ஆகியோரும் கிண்ற்றில் சிக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், இளம்பெண், அண்ணன், உறவினர் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கிணற்றில் விழுந்ததற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.