தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவம்pt desk

சீர்காழி | திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விழாவில் 11-ஆம் நாள் முக்கிய நிகழ்வாக தெப்போற்சவம் நடந்தது.

தெப்ப உற்சவம்
மதுரை | கூடல் அழகர் கோயில் தேரோட்டம்... கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் திருவிக்ரம நாராயண பெருமாள் ஆண்டாளுடன் தெப்பத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சக்கரை தீர்த்தம் சங்க புஷ்கரணி தெப்பக்குளத்தை 3 முறை பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com