சீர்காழி: உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் விலங்கு நல ஆர்வலர்

சீர்காழி: உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் விலங்கு நல ஆர்வலர்
சீர்காழி: உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் விலங்கு நல ஆர்வலர்

சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலையோர மரங்களில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு வனவிலங்கு நல ஆர்வலர் விஸ்வநாதன் உணவளித்து வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். விலங்கு நல ஆர்வலரான இவர், கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னால் முடிந்த உணவை வழங்கி வருகிறார்.

சீர்காழி - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சூரக்காடு என்னும் இடத்தில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே கடந்து செல்லும், அந்த வாகனங்களில் செல்லும் பலரும் குரங்குகளுக்கு உணவு கொடுத்து செல்வது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான குரங்குகள் உணவின்றி தவித்து வந்தன.

இதை அறிந்த விலங்கு நல ஆர்வலர் விஸ்வநாதன் கடந்த 15 நாட்களாக தினந்தோறும் அங்கு சென்று வாழைப்பழம், தர்பூசணி, மாம்பழம் என தன்னால் முடிந்த உணவுகளை குரங்குகளுக்கு வழங்கி அவற்றின் பசியை தீர்த்து வருகிறார். மேலும் ஊரடங்கு காலத்தில் நம்மை சார்ந்து வாழும் வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com