\
வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி

வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி

வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி
Published on

சீர்காழி அருகே நேற்று ஆதார் அட்டை எடுக்க தாயுடன் சென்ற 2 வயது குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சி.சி.டிவி காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அமிர்தலிங்கம் - ரஞ்சிதா தம்பதியினர். இந்நிலையில், நேற்று தனது மூன்றாவது குழந்தை அமரனுக்கு (2) ஆதார் அட்டை எடுப்பதற்காக கொள்ளிடம் ராஜன் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள தபால் நிலையத்திற்கு ரஞ்சிதா மகனுடன் சென்றுள்ளார்.

அப்போது தபால் நிலையத்திற்கு எதிரே அமரன் தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ராஜன் வாய்காலில் தவறி விழுந்த அமரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒருமணி நேரத்திற்கு பிறகு அமரன் உடலை மீட்டனர்.

இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தை அமரன் விளையாடும் போது ராஜன் வாய்க்காலில் தவறி விழுவதும் சகோதரன் காப்பாற்ற முயன்று முடியாததால் மற்றவர்களை உதவிக்கு அழைப்பதும் குறித்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com