\
உபரி நீர் திறப்பு: கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கிக் கொண்ட 27 பசு மாடுகள்

உபரி நீர் திறப்பு: கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கிக் கொண்ட 27 பசு மாடுகள்

உபரி நீர் திறப்பு: கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கிக் கொண்ட 27 பசு மாடுகள்
Published on

கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கிக் கொண்ட 27 பசு மாடுகளை மீட்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி முக்கொம்யில் இருந்து சுமார் 35 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று கடலில் கலக்கிறது.

இந்நிலையில் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் 27 பசு மாடுகள் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறது. அதனால் மாடுகளை ஆற்றில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com