\
ஓபிஎஸ் காரில் இருந்த சைரன் அகற்றம்

ஓபிஎஸ் காரில் இருந்த சைரன் அகற்றம்

ஓபிஎஸ் காரில் இருந்த சைரன் அகற்றம்
Published on: 

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்த சைரன் அகற்றப்பட்டது.

அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற மற்ற 30 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

இதனையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்த சைரன் அகற்றப்பட்டது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால், அதிமுக இரண்டாக பிரிந்தது. தற்போது சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியே முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com